News

Monday, 17 December 2012



21ம் தேதி ஒண்ணுமே நடக்காம இருந்தாலும் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்!




  • 666 னு தலைல எழுதி கொம்பு வைச்ச குழந்த பிறந்துருக்கு 
  • பெருமாள் கண்ண திறந்து பார்க்கப் போறாரு 
  • 2000 வருசம் பிறக்கப் போவுது. 

இந்த மூணு சப்ப காரணங்கள் & அறிவில்லாத புரளிகளை பலரும் நம்பினர். என் கண் முன்னே ஆடு கோழிகளை விற்று நன்றாக குடித்துவிட்டு அடுத்தநாள் ஒண்ணும் நடக்காம காமெடி ஆன பல பேர பார்த்துருக்கேன்.

இந்த முறை பிரச்சனைகள் வரும் என சொல்வதும் அறிவியாளர்கள். பிரச்னை வராது என சொல்வதும் அறிவியலார்கள். இந்த மாயன் நாள் காட்டி பற்றி எவருமே பயப்படவில்லை இந்த முறை.

December 21 முக்கியமான நாள்:  காரணங்கள்

 சூரியக் குடும்பம் பால் வெளியின் மத்திய ரேகையை தொட 26000 வருடங்கள் ஆகும். வரும் 21ம் தேதி இது அந்தப் புள்ளியை அடைகிறது. 
மாயன் நாள்காட்டி ஏற்கனவே 3 முறை முடிந்துள்ளது. இது நான்காவது முறை. இது சூரியன் பால் வெளியின் மைய ரேகையை அடையும் ஒரு Count Down போன்றது. 
மாயன் இனதிற்கு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்தவர் கிழக்கில் இருந்து வந்தவர் என குறிப்புகள் உள்ளது. அவர் 27 நாட்கள் கிழக்கே கடலில் சென்றால் அவரின் இருப்பிடம் உள்ளது. அவர் ஒருவேளை சூமேரியர், தமிழர் அல்லது வேற்று கிரக வாசி. 
சூரியனின் வட தென் துருவங்கள் இடம் மாற உள்ளன 
 பூமியின் வட தென் துருவங்களும் இடம் மாற உள்ளன. 
கண்ணுக்குத் தெரியாத (Infrared மூலம் மட்டுமே காணக் கூடிய) நிபுரு கிரகம் பூமியின் பாதையை நெருங்கி வர உள்ளது. இது மிக மிக வேகமாகப் பயணிக்கும் ஒரு கிரகம். இதை ஆராய நாசா (நாராயண சாமி அல்ல) அனுப்பிய Infrared telescopic satelite ஒழுங்காக வேலை செய்யாமல் திரும்பி வந்துவிட்டது. 
அமெரிக்காவில் Denver எனும் நகரத்தில் புதிய விமானநிலையம் 1995 இல் கட்டப்பட்டது. அதன் அடியில் பல மீட்டர் ஆழத்தில் ஒரு நகர மக்களே முழுவதும் தங்கும் அளவில் ஒரு ரகசிய காப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. 
சுவீடன் நாட்டில் அனைத்து மரம் செடி கொடிகளின் விதைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. ஒரு வேலை உலகம் அழிந்தால் மீண்டும் உருவாக்க. 
மாயன் சாதாரண மக்கள் இல்லை:

1. மாயன் வணங்கும் மரணத்தின் கடவுள் பால் வெளியின் மையத்தில் உள்ள ஒரு இருண்ட பகுதியில் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். இருளுக்கும் சிவனுக்கும் சம்பந்தம் உண்டு.

2. அப்போகலிப்டொ படத்தில் மாயன் இன மக்கள் அதிகமாக நரபலி கொடுக்கும் கொடூர் போலவும் அவர்களை ஸ்பேயின் ராணுவம் இறுதியில் வந்து சேர்வது போலவும் இருக்கும். உண்மை வரலாற்றில் பெரும் மாயன் இனக் கூட்டத்தை ஒரே இரவில் கொன்று குவித்த பெருமை இந்த ஸ்பேயின் ராணுவதையே சாரும்.  இதே ஸ்பேயின் ராணுவம் Pirates of the Carriebian 4  படத்தில் ஒரு கோவிலை அழிப்பது போல் காட்டி இருப்பர்.  அடிப்படைவாத  மதவாதிகள் (இந்து, இஸ்லாம், கிறிஸ்து, புத்தம்) அனைவரும் அடுத்தவரின் மதத்தை மதிப்பதில்லை. ஸ்பேயின் ராணுவம் செய்ததில் தவறில்லை என சப்பைக் கட்டு கட்டும் விதத்தில் பல துறைகளில் சிறந்து விளங்கிய மாயன் நாகரீகத்தின் ஒரே ஒரு மூடப் பழக்கமான  நரபலியை மட்டும் படம் முழுவதும் காட்டி அவர்களின் மீது ஒரு போது வெறுப்பு வருமாறு செய்திருப்பார் இயக்குநர் Mel Gibson.  The passion of the christ படம் பார்த்தாலும் உங்களுக்கு எசுவை கொன்ற இனத்தின் மீது ஒரு பெரும் வெறுப்பு வருமாறே அவர் படம் இயக்கியுள்ளார். இந்த Mel Gibson ஒரு அடிப்படை வாத Christian.

3.  மாயன் மக்களுக்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் தொடர்பு இருப்பது போன்ற பல பல சிலைகள் உள்ளன.
4. மாயன் மக்கள் வணங்கிய கடவுளின் கையில் பாம்பு இருக்கும். பாம்பு என்பது கிறிஸ்து மதத்தில் சாத்தான். இந்துக்கள் தெய்வம் பாம்பு.

5. மாயன் மக்களின் கட்டிடங்களுக்கும் பல்லவ (மாமல்லபுரம்) கட்டிடங்களுக்கும் உருவ ஒற்றுமை உண்டு.

மாயனும் தமிழர்களும்: 
1. நான் சொல்வதை விட, ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் சொன்னால் நீங்கள் நம்புவீர்கள்.
Author Name: Gene D. Matlock
Link for Reference: http://viewzone2.com/ancientturksx.html

21ம் தேதி நடக்க வாய்ப்புள்ள விசயங்கள்: 

1. ஒரு வேளை ரெண்டு நாள் தள்ளிக் கூட எதுவும் நடக்கலாம்.
2. எரி கற்கள் சில பூமியின் மீது விழலாம்.. சிறிய அல்லது பெரிய கற்கள்.
3. மின் காந்த பதிப்பு ஏற்பட்டு மின் சாதனங்கள் பழுதாகலாம்.
4. பறவைகள், மீன்கள் வழிததவறிப் போகலாம்.
5. மின் காந்த அலைகளால் அனைத்து மனிதர்களும் மிகவும் நல்ல மனிதர்களாக மன மாற்றம் பெறலாம். (இது கொஞ்சம் பேராசை தான்)
6. நாம் எதிர்பார்க்காத ஏதோ ஒன்று நடக்கலாம்

உங்களுக்கு ஒரு ரெண்டு மணிநேரம் இருந்தால் இந்த விரிவான தொகுப்பை படியுங்கள். சில இடங்களில் அவர் Buildup கொடுத்திருப்பார். நீங்கள் விசயத்தை மட்டும் பாருங்கள். உலகம் அழியவில்லை என்றாலும் நீங்கள் சரித்திர உண்மைகளை அறிந்திருப்பது முக்கியம்.


என் கருத்து:

என்னைப் பொருத்தவரை உலகம் ஏற்கனவே அழிந்துகொண்டு தான் வருகிறது. இந்த வருடம் மட்டும் மிக மிக அதிக எண்ணிக்கையில் பூகம்பம் மற்றும் புயல்கள். மதுரையில் நில நடுக்கம். வேகமாக மனிதன் தன் பங்கிற்கு பலவித விலங்கு பறவை மீன் இனங்களை வாழ வழி இல்லாமல் செய்து வருகிறான்.

21ம் தேதி ஒண்ணுமே நடக்கலனாளும் அடுத்த 40-60 வருடங்களில் எவருமே வாழத் தகுதியில்லாத இடமாக இந்தப் புவியை மனிதனே மாற்றுவான். 400 வருட கால அறிவியலும் 50 வருட கால கணினியின் அசுர வளர்ச்சியும்.. ஆயிரமாயிரம் வருட விவசாய, கலை, சித்தா, கட்டிட வடிவமைப்பு அறிவுக் களஞ்சியங்களை துச்சம்மென சொல்லும் இந்த சம கால தமிழினம் அதன் உச்சத்தை எப்போதோ அடைந்துவிட்டது.

மிக மிக உச்சத்தில் இருப்பவன் அடுத்து செல்லக் கூடிய இடம் இறக்கத்தில் இருக்கும் சரிவு தான்.  தமிழினம் அதன் பெருமைகளை இழந்து வருவது இதனால் தான்.

பின் குறிப்பு: நாசா, அமெரிக்கா, ஐ நா, நாராயண சாமி, சுப்பிரமணிய சாமி  என எல்லாரும் ஒரே ரகம் தான்.

Sunday, 16 December 2012

 பாலுணர்வும்  ஆன்மீகமும் 




புதிய ராம் 

SDRAM, DDR, DDR2, DDR3 என்ற வரிசையில் புதிதாக MeRAM (Magneto Electric Random Access memority)  எனும் புது வகை நினைவகம் கடந்த வாரம் நடந்த  2012 IEEE International Electron Devices Meeting in San Francisco வில் அறிமுகம் செய்யப்பட்டது. ““Voltage-Induced Switching of Nanoscale Magnetic Tunnel Junctions” எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் MeRAM பற்றிய தகவல்கள் முதன் முதலில் வெளியிடப்பட்டன.

spin-transfer torque (STT) எனப்படும் மின் காந்த தொழில்நுட்பத்தில் மின்சாரத்தில் உள்ள நகரும் எலெகட்ரான் மூலம் தகவல்களை நினைவாகத்தில் எழுதும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.

Electron களில் உள்ள காந்தப் பண்பான “சுழற்சி” (Magetic property of lectrons – referred as spin in addition to their charge)  எனும் வகையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் சில சிக்கல்களை சந்தித்தனர், அதிக தகவல்களை எழுத முற்படும் போது அதிக எண்ணிக்கையில் Electron களை சுழலச் செய்வதால் அதிக மின்சாரமும் அதிக வெப்பமும் ஏற்பட்டது, இதை தவிர்க்க மின்சாரத்தில் உள்ள Voltage ஐ நேரடியாக பயன்படுத்திப் பார்த்தனர். இப்போது வெப்பமும் ஏற்படவில்லை அதே நேரத்தில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களை எழுத முடிந்தது.

இதன் மூலம் மிகக் குறைந்த மின்சாரம்(10 – 1000 மடங்கு குறைவு) , மிக அதிக வேகம், அதிக இடம் (5 மடங்கு) மற்றும் மிகக் குறைந்த விலையில் கணினி நினைவகங்களை உருவாக்க முடியும்.

கணினி மட்டும் அல்லாது செல்போன், TV போன்ற பிற மின்சாதனங்களில் இதை குறைந்த விலையில் பயன்படுத்த இயலும்





Thursday, 13 December 2012


29,900/- ரூபாய் முதல் லெனோவா அறிமுகப்படுத்தும் ஆல் இன் ஒன் விண்டோஸ் 8 கனிணிகள்

கனிணி சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்து வரும் லெனோவா நிறுவனம் தனது சி சிரீஸ் வரிசையில் விண்டோஸ் 8 இயங்குதளம் கொண்ட ஆல் இன் ஒன் டெஸ்க்டாப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
IdeaCentre C340 and IdeaCentre C440 என்ற அந்த இரண்டு டெஸ்க்டாப்புகளும் 29,900/- ரூபாய் மற்றும் 41,990/- என இரண்டு விலைகளில் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த இரண்டு டெக்ஸ்டாப்புகளும் 21.5 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன், இண்டெல் கோர் ஐ 3 ப்ராஸஸர் மற்றும் Nvidia GeForce 615 2GB க்ராபிக்ஸ் கார்டு ஆகிய தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது.
1டிபி ஹார்ட் டிஸ்க், 8ஜிபி ரேம், ஹெச்டி தரத்தில் வீடியோ சாட்டிங் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வெப்கேம் ஆகியவையும் உண்டு.
மிக முக்கியமான இதில் இருக்கும் Lenovo Eye Distance System என்ற தொழில்நுட்பம் நம் கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆமாம், போதிய இடைவெளி விடாமல் நாம் ஸ்க்ரீனுக்கு அருகில் போனால் ஸ்க்ரீன் தானாகவே அணைந்து விடுமாம்.

Wednesday, 12 December 2012


CCleaner is a freeware system optimization, privacy and cleaning tool. It removes unused files from your system - allowing Windows to run faster and freeing up valuable hard disk space. It also cleans traces of your online activities such as your Internet history. Additionally it contains a fully featured registry cleaner. But the best part is that it's fast (normally taking less than a second to run) and contains NO Spyware or Adware! :)

Cleans the following:

Internet Explorer
Firefox
Google Chrome
Opera
Safari
Windows - Recycle Bin, Recent Documents, Temporary files and Log files.
Registry cleaner
Third-party applications
100% Spyware FREE




விண்டோஸ் 8 சிஸ்டத்தின் புதிய இடைமுகத்துடன் சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்தே தரப்படுகின்றன. விண்டோஸ் ஸ்டோர் அணுகி, ஆயிரக்கணக்கில் நமக்குத் தேவையான அப்ளிகேஷன் 
புரோகிராம்களை,பெரும்பாலும் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். இங்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இருபது அப்ளிகேஷன்கள் குறித்து காணலாம்.

1. ஸ்டோர்: விண்டோஸ் ஸ்டோர் அணுகி நாம் பல புதிய அப்ளிகேஷன்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே போலவே இயங்குகிறது. இதில் சர்ச் மூலம் நமக்குத் தேவையான அப்ளிகேஷனைத் தேடி, இன்ஸ்டால் பட்டனை அழுத்துவதன் மூலம் அதனை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். சில அப்ளிகேஷன்கள், அவை வைக்கப்பட்டிருக்கும் இணைய தளங்களில் இருந்து தான் பெற முடியும். தளத்திற்கு இணைப்பு பெற்று, டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். 

2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மாறா நிலையில் தரப்படும் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10. முன்னர் வந்த பிரவுசர்களைக் காட்டிலும் இது, கூடுதல் வேகத்தில் இயங்குகிறது. தொடுதலில் இதனை இயக்கலாம். இதில் ஆட் ஆன் மற்றும் பிளக் இன் புரோகிராம்களைப் பெற்று இயக்க முடியாது. சில இணைய தளங்களில் மட்டும் பிளாஷ் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

3. மெயில், காலண்டர், மக்கள் மற்றும் செய்தி அனுப்புதல்: விண் 8 சிஸ்டத்தில் Mail, Calendar, People மற்றும் Messaging ஆகிய அனைத்தும் ஒன்றுக் கொன்று இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கிறது. இவற்றில் ஒரு அப்ளிகேஷனில் ஒரு அக்கவுண்ட்டினை இணைத்தால், அது மற்றவற்றிலும் கிடைக்கும். இதில் கிடைக்கும் மெயில் அப்ளிகேஷன், நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான வசதியை மட்டும் தருகிறது. இங்கு ஹாட்மெயில், அவுட்லுக் அல்லது ஜிமெயில் அக்கவுண்ட்களை இணைத்துக் கொள்ளலாம். IMAP, POP, or Exchange ActiveSync (EAS) போன்ற எதனையும் இணைக்கும் ஆப்ஷனையும் கொண்டுள்ளதால், எந்த மெயில் அக்கவுண்ட்டினையும் இணைக்கலாம். காலண்டர் அப்ளிகேஷன், இணைய தள சேவைகள் தரும் காலண்டர்களைக் காட்டுகிறது. ஹாட்மெயில், அவுட்லுக் மற்றும் கூகுள் காலண்டர்களை இணைக்கிறது. People அப்ளிகேஷன் ஒரே இடத்தில் உங்கள் காண்டாக்ட் அனைத்தையும் தருகிறது. ஹாட்மெயில், அவுட்லுக் மற்றும் கூகுள் அக்கவுண்ட்ஸ் மட்டுமின்றி, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் லிங்க்ட் இன் தொடர்புகளையும் இணைக்கிறது. Messaging அப்ளிகேஷன் நம்முடைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. விண்டோஸ் லைவ் மெசஞ்சர் மற்றும் பேஸ்புக் சேட் ஆகியவற்றையும் சப்போர்ட் செய்கிறது. ஆனால், இதில் மற்ற பிரபலமான கூகுள் டாக் போன்றவைகளுக்கு சப்போர்ட் இல்லை.

4. சீதோஷ்ண நிலை (Weather): இந்த அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் இயங்கும் இடத்தின் சீதோஷ்ண நிலையைக் காட்டுகிறது. இத்துடன் மற்ற இடங்களுக்கான சீதோஷ்ண நிலையைக் காட்டும்படியும், செட் செய்திடலாம். இதற்குள்ளாகச் சென்று, ஒவ்வொரு மணி நேரத்திற்குமான, சீதோஷ்ண நிலை, வர இருக்கின்ற நிலைக்கான முன்னறிவிப்பு ஆகியவற்றையும் பெறலாம். 

5. செய்தி, நிதி மற்றும் விளையாட்டு (News, Finance, மற்றும் Sports): மைக்ரோசாப்ட் Bing தளத்திலிருந்து தகவல்கலைப் பெற்று இந்த அப்ளிகேஷன் இயங்குகிறது. News அப்ளிகேஷன் அண்மைச் செய்திகளை, விரல் தொடுதலில் தருகிறது. மாறா நிலையில் “Bing Daily” என்னும் செய்தியைக் கொடுக்கிறது. மற்ற BBC, New York Times, மற்றும் Wall Street Journal போன்ற செய்தி சேனல்களுக்கும் இதில் செட் செய்திடலாம். Finance அப்ளிகேஷன் சந்தை நிலவரத்திற்கேற்ப தகவல்களையும் வரை படங்களையும் தருகிறது. நாம் விரும்பும் பங்குகள் குறித்த தகவல்களை மட்டும் காணும்படி இதனை செட் செய்திடலாம். Sportsஅப்ளிகேஷன், விளையாட்டுத் துறை சம்பந்தமான அண்மைத் தகவல்கள், நடக்க இருக்கின்ற போட்டிகள், நடந்த போட்டிகளின் முடிவுகள் ஆகியவற்றைத் தருகிறது. 

6.ட்ராவல் (Travel): Bing Travel அப்ளிகேஷன் மூலம் நாம் சுற்றுலா செல்லக் கூடிய இடங்கள் குறித்த தகவல்களை அறியலாம். குறிப்பிட்ட இடம் குறித்த தகவல்கள், பயணிக்க வசதிகள், அங்கு இயங்கும் விடுதிகள் போன்றவற்றை அறியலாம்.

7. புகைப்படங்கள் (Photos): பல்வேறு இடங்களில் நாம் சேவ் செய்து வைத்திருக்கின்ற போட்டோக்களை இந்த அப்ளிகேஷன் மூலம் பார்க்கலாம். ஹார்ட் ட்ரைவ் அல்லது இணைக்கப்பட்டிருக்கும் ட்ரைவ், ஸ்கை ட்ரைவ், பேஸ்புக் அல்லது ப்ளிக்கர் அக்கவுண்ட்ஸ் என எதில் வைத்திருந்தாலும், இதன் மூலம் காணலாம். ஆனால்,கூகுள் பிகாஸா உட்பட மற்ற எந்த புகைப்பட சேவை தளங்களும் இதில் சப்போர்ட் செய்யப்படவில்லை.

8. இசை மற்றும் வீடியோ (Music and Video): இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பாடல் மற்றும் வீடியோ பைல்களை இயக்கலாம். இணையதள மியூசிக் மற்றும் வீடியோ ஸ்டோர்களும் இதில் இணைக்கப் பட்டுள்ளன. Xbox Music ஸ்டோரிலிருந்து பாடல்களை இந்த அப்ளிகேஷன் மூலம் கட்டணம் செலுத்திப் பெறலாம்.

9. விளையாட்டுக்கள் (Games): Xboxbranded Windows 8 கேம்ஸ் மட்டும் இதில் பெறலாம்.

10. பிங் (Bing): மைக்ரோசாப்ட் பிங் தேடல் சாதனத்தை இந்த அப்ளிகேஷன் தருகிறது.  உங்களுக்கு கூகுள் தேடல் வசதிதான் வேண்டுமென்றால், விண்டோஸ் 8க்கான கூகுள் சர்ச் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைப் பெற http://apps.microsoft.com/webpdp/enUS/app/googlesearch/308dc1456851487db83b1223a3b52dc2 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் செல்லவும்.

11. மேப்ஸ் (Maps): இந்த அப்ளிகேஷன் Bing Mapsஐப் பயன்படுத்துகிறது. ஜி.பி.எஸ். இணைந்த டேப்ளட் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், நீங்கள் இருக்கும் இடத்தினை இந்த மேப் மூலம் பெறலாம். கூகுள் மேப் பயன்படுத்துவது போல, குறிப்பிட்ட இரு இடங்களுக்கிடையே பயணம் செய்வதற்கான வழியைப் பெறலாம்.

12. ஸ்கை ட்ரைவ் (SkyDrive): இணையத்தில் உங்கள் SkyDrive அக்கவுண்ட்டில் பதிந்து வைத்துள்ள பைல்களை இந்த அப்ளிகேஷன் காட்டுகிறது. உங்கள் பைல்களை, இந்த அப்ளிகேஷன் மூலம், SkyDrive தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். நீங்கள் ஸ்கை ட்ரைவ் வசதியை, டெஸ்க்டாப்பிலேயே வைத்துப் பயன்படுத்த வேண்டும் எனில், அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதனைப் பெற http://windows.microsoft.com/enUS/skydrive/download என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

13. ரீடர் (Reader): PDF மற்றும் XPS பைல்களைப் படிக்க உதவும் ஓர் எளிய அப்ளிகேஷன் இது. இந்த வகையில், விண்டோஸ் சிஸ்டம் முதல் முதலாக ஒரு பி.டி.எப். ரீடர் அப்ளிகேஷனைக் கொண்டுள்ளது. 

14. கேமரா (Camera): உங்கள் வெப் கேமராவினைப் பயன்படுத்தி, கேமரா அப்ளிகேஷன் மூலம் போட்டோ மற்றும் வீடியோவினை எடுக்கலாம். பெர்சனல் கம்ப்யூட்டரிலேயே வெப்கேமரா இணைக்கப் பட்டிருந்தால், அதனையும் பயன்படுத்தலாம். விண்டோஸ் ஸ்டோர் அணுகினால், இன்னும் நிறைய இது போன்ற அப்ளிகேஷன்களைப் பெற்று பயன்படுத்தலாம். மேலே காட்டப்பட்டவை அனைத்தும் விண்டோஸ் 8 சிஸ்டத்துடனேயே நமக்குக் கிடைக்கின்றன. வருங்காலத்தில், மைக்ரோசாப்ட் இந்த அப்ளிகேஷன் தரும் வசதிகளை இன்னும் சீரமைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Tuesday, 11 December 2012

இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார்   என்றும் அன்புடன்

மகேந்திரன் 

ரஜினிஸ்ரேயா ஜோடியாக நடித்த சிவாஜி‘ படம் 3டியில் புதுப்பிக்கப்பட்டு நாளை வெளியிடப்படவுள்ளது.

3டியில் ரஜினி அழகாக இருப்பதாக படம் பார்த்த இயக்குனர் ஷங்கர்,வைரமுத்து ஆகியோர் கூறினர்.

வாஜி வாஜி வாஜி’ மற்றும் பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்’ பாடல்களில் ரஜினியும் ஸ்ரேயாவும் கண்ணுக்கு அருகே நின்று ஆடுவதுபோல் காட்சிகள் பிரமாண்டமாக உள்ளது.காவிரி ஆறும் கைகுத்தல் அரிசியும்’ பாடலில் நயன்தாராவின் கொள்ளை அழகு கண்களில் முழுமையாக ஊடுருவுகிறது.

ஸ்ரேயா நீச்சல் குளத்தில் நீந்துவது அபார கவர்ச்சி. ரஜினி ஆப்பிளை தின்று வீசும்போது முகத்தில் படுவது போன்ற அதிர்ச்சி. ஒரு காட்சியில் அவர் சுண்டி விடும் நாணயம் படம் பார்ப்பவர்கள் முகத்தில் வந்து விழுகிறது. இத்தகு 3டி தொழில்நுட்பத்துக்கு சிவாஜி படத்தை ஏ.வி.எம். நிறுவனம் மாற்றி உள்ளது.